‘நிப்ட்’ நிறுவனத்தில் வேலை


‘நிப்ட்’ நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 26 Nov 2021 4:58 PM IST (Updated: 26 Nov 2021 4:58 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிப்ட்) வளாக இயக்குநர், இயக்குனர், செயற்திட்ட பொறியாளர், செயற் பொறியாளர், கண்காணிப்பு அலுவலர், கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், உதவியாளர், நூலகர் உள்பட 136 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பதவிகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவாளர், நிப்ட் வளாகம், கவுஸ் காஸ், குல்மோஹர் பார்க் அருகில், புதுடெல்லி - 110016 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-12-2021. வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை பற்றிய விரிவான விவரங்களை https://nift.ac.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
1 More update

Next Story