லாஜிடெக் சிக்னேச்சர் எம் 650 மவுஸ்


லாஜிடெக் சிக்னேச்சர் எம் 650 மவுஸ்
x
தினத்தந்தி 27 Jan 2022 12:00 PM IST (Updated: 27 Jan 2022 12:00 PM IST)
t-max-icont-min-icon

கம்ப்யூட்டர் சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக எம் 650 என்ற பெயரிலான வயர்லெஸ் மவுஸை அறிமுகம் செய்துள்ளது.

இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கென பிரத்யேகமான வடிவமைப்பிலும், எத்தகைய தளத்திலும் செயல்படும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மவுஸ் நகர்த்தலுக்கேற்ப சுழலும் வகையிலான சக்கரம், சப்தமில்லாத கிளிக் செயல்பாடு உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். இணையதளத்தில் தேடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு மிகவும் ஏற்றது.

வெள்ளை, கிராபைட், இளம் சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இது விண்டோஸ், மேக் ஓ.எஸ்., லைனக்ஸ், குரோம், ஐபாட் உள்ளிட்ட இயங்குதளங்களிலும் செயல்படும். புளூடூத் இணைப்பு வசதி உள்ளதால் யு.எஸ்.பி. ரிசீவர் மூலம் இது செயல்படும். இதில் உள்ள பிளாஸ்டிக் பகுதி மறு சுழற்சி பிளாஸ்டிக்கில் தயாரானவை. இதன் விலை சுமார் ரூ.3 ஆயிரம்.
1 More update

Next Story