மூன்றரை மணி நேரம் அவந்திகா பெரியாறு ஆற்றில் மிதந்து சாதனை


மூன்றரை மணி நேரம் அவந்திகா பெரியாறு ஆற்றில் மிதந்து சாதனை
x

மூன்றரை மணி நேரம் அவந்திகா பெரியாறு ஆற்றில் மிதந்து சாதனை படைத்திருக்கிறார்.

பெரியாறு ஆற்றில் நீந்தி மிதந்து மாளவிகா - அவந்திகா ஆகிய இரு கேரள சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் இளைய சகோதரி அவந்திகாவுக்கு 10 வயதுதான் ஆகிறது. கடந்த மார்ச் மாதம்தான் நீச்சல் பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார். நன்றாக நீந்தி பழகியவர் தொடர்ந்து மூன்றரை மணி நேரம் பெரியாறு ஆற்றில் நீந்தி மிதந்து சாதனை படைத்திருக்கிறார்.

இது குறித்து அவந்திகாவின் தாயார் சித்ரா கூறுகையில், "ஆற்றில் 30 அடி ஆழம் கொண்ட பகுதியில் நீந்தினார். மிதந்தபோது தற்காப்பு உடைகள் ஏதும் அணியவில்லை. இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்டு அமைப்புகள் இவரது சாதனையை அங்கீகரித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி தான் முதல் முறையாக அவந்திகா நீச்சல் பயிற்சி எடுத்தாள்.

அவந்திகாவின் அக்கா மாளவிகாவும் ஏற்கனவே பெரியாறு ஆற்றில் நீந்தியுள்ளார். தற்போது அவந்திகா 780 மீட்டர் தொலைவுக்கு நீந்தி மிதந்திருக்கிறாள். இன்னும் அதிகம் நேரம் மிதக்க விரும்பினாள். மிதக்கும் நுட்பத்தை பயன்படுத்தினாள்.

நீரில் மிதக்கும் நுட்பத்தை கற்றுக்கொண்டால் தண்ணீரில் தத்தளிக்கும்போது தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிதக்கும் நுட்பத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். என் மகள்கள் இருவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்கள்" என்றார்.


Next Story