பித்தத்தில் 5 வகை


பித்தத்தில் 5 வகை
x

பித்தம் உணவை செரிக்க உதவுகிறது. பித்தத்தை கட்டுப்படுத்த இஞ்சித்துண்டுகளை, தேனில் ஊறவைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

உடலுக்கு பித்தம் பல நன்மைகளை செய்கிறது. நமது பாரம்பரிய மருத்துவம் பித்தத்தை 5 வகையாக பிரிக்கிறது. முதல் வகை, இரைப்பை, ஜீரணப்பை இவற்றின் நடுவில் இருக்கும். இந்த பித்தத்தை பாசகம் என்கிறார்கள். இது உணவை செரிக்க உதவுகிறது. அதனால் இதற்கு `அக்னி' என்ற பெயரும் உண்டு. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற கழிைவயும் பிரிக்கிறது. சத்துக்களை அனுப்பி மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன் இடத்திலிருந்தே ஊட்டமளிக்கிறது.

இரண்டாம் வகை ரஞ்சக பித்தம் எனப்படுகிறது. இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு, உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது. மூன்றாம் வகை சாதக பித்தம், இது இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு இயங்குகிறது. நான்காம் வகை ஆலோசக பித்தம், இது கண்களில் தங்கி பார்க்கும் சக்தியை அளிக்கிறது. ஐந்தாவது வகை புராஜக பித்தம், சருமத்தை உறைவிடமாகக் கொண்டு பொலிவை கொடுக்கிறது.

காரம், புளிப்பு, உவர்ப்பு, அசைவ உணவுகளில் மீன், கோழி, நண்டு, எண்ணெயில் பொரித்த உணவுகள், நூடுல்ஸ், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்கு காரணமாகிவிடும். இதன் காரணமாக சுமார் 40 வகையான பித்த நோய்கள் வரலாம்.. பித்தத்தை கட்டுப்படுத்த இஞ்சித்துண்டுகளை, தேனில் ஊறவைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச்சாறு, வெங்காயச்சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

1 More update

Next Story