நாளை நிகழ்கிறது புறநிழல் சந்திர கிரகணம்..!


நாளை நிகழ்கிறது புறநிழல் சந்திர கிரகணம்..!
x

கிரகணத்தின் போது நிலவு வழக்கத்தை விட சற்று கருமையாக காணப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும், இந்த நிகழ்வு பவுர்ணமி நாளில் தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ்கிறது. இது பகுதி சந்திர கிரகணமாக தெரியும். இந்த கிரகணத்தின் போது நிலவு வழக்கத்தை விட சற்று கருமையாக காணப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகணத்தை ஐரோப்பியா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் பார்க்கமுடியும்.

இந்திய நேரப்படி இந்த பகுதி சந்திரகிரகனம் இரவு 8.44 மணிக்கு தொடங்குகிறது. உச்ச கிரகணம் இரவு 10.52 மணிக்கு ஏற்படும். அதிகாலை 01.01 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. இந்த சந்திரகிரகணம் இந்தியாவில் தெரியாது.

1 More update

Next Story