ஏசர் குரோம்பாக்ஸ் சி.எக்ஸ் 15 மினி பர்சனல் கம்ப்யூட்டர்


ஏசர் குரோம்பாக்ஸ் சி.எக்ஸ் 15 மினி பர்சனல் கம்ப்யூட்டர்
x

ஏசர் நிறுவனம் மினி பர்சனல் கம்ப்யூட்டரை குரோம்பாக்ஸ் சி.எக்ஸ் 15 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

பள்ளிகள் மற்றும் பணியிடங்களுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 1-ம் தலைமுறை இன்டெல்கோர் ஐ 7 பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. கூகுள் இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. விரைவாக இணையதள இணைப்பு கிடைக்க இதில் இன்டெல் வை-பை 6 இ பயன்படுத்தப் பட்டுள்ளது. இத்துடன் 24 அங்குல மானிட்டரை யும் அறிமுகம் செய்துள்ளது.

இது முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதில் 5 மெகா பிக்ஸெல் வெப் கேமரா உள்ளது. அத்துடன் 4 வாட் திறன் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. வீடியோ உரையாடல்கள் தெளிவாகக் கேட்பதற்கு வசதியாக இதில் இரைச்சல் தவிர்ப்பு தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது.

1 More update

Next Story