அகாய் ஸ்பீக்கர்


அகாய் ஸ்பீக்கர்
x

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமான ஜப்பானைச் சேர்ந்த அகாய் நிறுவனம் தற்போது ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும், வீடுகளில் பயன்படுத்துவதற்கேற்ற சவுண்ட் பார்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரட்டை அடுக்குகளைக் கொண்ட மரத்தால் ஆன டுவின் டவர் ஸ்பீக்கர்கள் இதில் மிகவும் பிரபலமானதாகும்.

பி.எம்.80 பி என்ற ஸ்பீக்கர் 80 வாட் திறன் கொண்டதாகும். இந்த மாடலில் 80 வாட், 120 வாட் மற்றும் 140 வாட் திறன்களில் ஸ்பீக்கர்கள் வந்துள்ளன. இவற்றுடன் 5.25 அங்குலம் மற்றும் 6.25 அங்குல சப் ஊபர்களும் வந்துள்ளன. மற்றொரு மாடலாக டி.எஸ்.160 டுவின் டவர் ஸ்பீக்கர் வந்துள்ளது. இதில் 8 அங்குல ஊபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது 32 அங்குல உயரம் கொண்டது. 160 வாட் திறனை வெளிப்படுத்தும். ஸ்பீக்கரில் எல்.இ.டி. விளக்கு பிரகாசிக்கும்.

இதில் 5,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,990 முதல் ஆரம்பமாகிறது.

1 More update

Next Story