ஆல் கொயெட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்


ஆல் கொயெட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்
x

நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியான ஜெர்மானிய படம் இது. முதல் உலகப்போர் முடியும் நேரத்தில் கதை தொடங்குகிறது.

தன் எதிரி நாடுகளிடம் தோற்கும் தருவாயில் ஜெர்மனி தள்ளாடும் சூழல். ஆள் பற்றாக்குறை காரணமாக பள்ளி மாணவர்களை போருக்கு அனுப்ப அந்த நாட்டு அரசு முடிவெடுக்கிறது. நாட்டிற்கு சேவை ஆற்ற போகிறோம் என்ற தேசப்பற்றில் நாயகனுடன் இளரத்த விடலைகள் போருக்கு செல்ல தயாராகிறார்கள். போர்க்களம் புகும் முன்னால் அது எவ்வளவு கொடூரமானது என அவர்களுக்கு தெரியவில்லை. அங்கே கதாநாயகன் கண்முன் அவன் நண்பர்கள் சாகிறார்கள்.

அந்தநேரத்தில் மரண பயம் பீறிடுகிறது. போர்க்களத்தில் இருக்கும் நாட்களில் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாயகன் மிருகமாக மாறுகிறான். நாயகன் உயிரோடு போர்க்களத்தில் இருந்து மீண்டானா? என்பதை பரபரக்கும் கதையில் சுவராசியமாக எடுத்திருக்கிறார்கள். முதல் உலகப்போர் நடந்த இடத்திற்கே நம்மை கொண்டு செல்கிறார்கள்.

தங்கள் சுயநலத்திற்காக நாட்டின் சொத்துக்களை விரயப்படுத்தும் தற்கால அரசியல்வாதிகளை சாடும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. சிறந்த வெளிநாட்டு திரைப்படம், ஒளிப்பதிவு, இசை, படத்தயாரிப்பு மற்றும் தழுவிய திரைக்கதை (இதே பெயரில் 1928-ம் ஆண்டு போரில் பிழைத்த ஜெர்மனி வீரரால் எழுத்தப்பட்ட நாவல்) ஆகிய 5 பிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்றது. போருக்கு எதிரான படங்களில் மிகமுக்கிய இடம் 'ஆல் கொயெட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்' பெறும்.


Next Story