அமேசான் எக்கோ டாட் அறிமுகம்


அமேசான் எக்கோ டாட் அறிமுகம்
x

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 5-வது தலைமுறை எக்கோ டாட் சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்பு 4-வது தலைமுறை மாடலை 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது 5-வது தலைமுறை மாடலை மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அறிமுகம் செய்துள்ளது. முந்தைய தயாரிப்பை விட பலமேம்பட்ட அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

பொருட்கள், மனிதர்கள் அசைவை உணர்வது, வானிலை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கும். வீட்டினுள் நுழையும்போது இரவு நேரமாயிருப்பின் விளக்குகள் எரியச் செய்யும், அதேபோல அறையில் வெப்பம் நிலவினால் ஏர் கண்டிஷனரை இயங்கச் செய்யும். வை-பை மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலம் செயல்படக்கூடியது. விரைவிலேயே ஐ.ஓ.எஸ். தளத்தில் இயங்கும் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது. கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.5,499


Next Story