அதிகாலையில் எழுவதில் சிரமமா?


அதிகாலையில் எழுவதில் சிரமமா?
x

எளிமையான அக்குபஞ்சர் சிகிச்சை முறையிலேயே தூக்கத்தை விரட்டி அடித்துவிடலாம். அமெரிக்காவை சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் இந்த விழிப்பு நிலை பயிற்சியை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

குளிர்காலத்தில் அதிகாலை வேளையில் படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் எழும். காலை 6 மணியை கடந்த பிறகும் படுக்கை அறையை விட்டு வெளியேறாமல் கண்கள் தூக்கத்தை சுமந்து கொண்டிருக்கும்.

படுக்கையிலேயே உருண்டு புரண்டு எழுந்திருக்க தாமதமாவதால் அவசர அவசரமாக புறப்பட வேண்டி இருக்கும். அதிலும் நீண்ட தூர பயணம் செய்து வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பார்கள். எளிமையான அக்குபஞ்சர் சிகிச்சை முறையிலேயே தூக்கத்தை விரட்டி அடித்துவிடலாம். 20 விநாடிகளில் அந்த அக்குபஞ்சர் சிகிச்சை தூக்க கலக்கத்தில் இருந்து உங்களை விடுவித்துவிடும். அமெரிக்காவை சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் இந்த விழிப்பு நிலை பயிற்சியை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

மூக்கின் நடுப்பகுதிக்கும், மேல் உதட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் கண்களை விழிப்படைய செய்யலாம். நடுவிரலின் நுனிப்பகுதியை மூக்குக்கும், உதட்டுக்கும் இடையே மையப் பகுதியில் வைத்து நன்றாக அழுத்த வேண்டும். அதே நிலையில் 20 விநாடிகள் வைத்திருக்க வேண்டும். அதுபோல் ஓரிரு முறை செய்தாலே போதும்.

இந்த பயிற்சியின்போது கண்கள் மயக்க நிலையில் இருந்து மீளும். சில சமயம் கண்களில் இருந்து கண்ணீரும் வரலாம். இந்த புள்ளியில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் முதுகுவலியையும் விரட்டிவிடலாம். கைவிரல்களை உள்ளங்கைக்குள் மூடி வைத்த நிலையில் குத்துவதுபோல் மடங்கிய விரல்களை கொண்டும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுத்து இந்த அக்குபஞ்சர் சிகிச்சையை மேற்கொள்ளலாம். பேனாவின் பின் முனை பகுதியை கொண்டும் அழுத்தம் கொடுக்கலாம்.

இந்த அக்குபஞ்சர் பயிற்சி தவிர கண்களை விழிப்பு நிலைக்கு கொண்டுவந்து சோம்பலை விரட்டுவதற்கு படுக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்தால் போதும். திரைச்சீலைகளை அகற்றி சூரிய வெளிச்சத்தை பார்ப்பதும் விழிப்படைய செய்யும். நன்கு ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளிவிடுவதும் விழிப்பை தூண்டும். காலையில் எழுந்ததும் காபி பருகுவதும் புத்துணர்ச்சியை தூண்டும்.

1 More update

Next Story