ஏ.எஸ்.யு.எஸ். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்


ஏ.எஸ்.யு.எஸ். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
x

கம்ப்யூட்டர் சாதனங்களைத் தயாரிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 12-ம் தலைமுறையைச் சேர்ந்த இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 64 ஜி.பி. ரேம் கொண்டது. யு.எஸ்.பி. போர்ட், வை-பை இணைப்பு வசதி, புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. இதில் செயற்கை நுண்ணறிவு சுற்றுப்புற இரைச்சல் தவிர்ப்பு நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதால் வீடியோ கான்பரன்ஸ் அழைப்புகளை மிகத் தெளிவாக மேற்கொள்ள இயலும்.

இதன் விலை சுமார் ரூ.34,790 முதல் ஆரம்பமாகிறது.


Next Story