சக்தி குறையாத பேட்டரி


சக்தி குறையாத பேட்டரி
x

எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்கும் பேட்டரிகளை அடிக்கடி மாற்றி சலித்திருப்பீர்கள்.

எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்கும் பேட்டரிகளை அடிக்கடி மாற்றி சலித்திருப்பீர்கள். ஆனால் அதே பேட்டரிகளை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றினால் எப்படியிருக்கும்? அத்தகைய திறனுடைய நியூக்ளியர் பேட்டரியை மாஸ்கோவைச் சேர்ந்த ரஷிய விஞ்ஞானிகள் தயாரித்திருக்கிறார்கள்.

ரஷிய அறிவியல் இன்ஸ்டிடியூட்டுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, நிக்கல்-63 (1 மைக்ரோவாட் சக்தி) தனிமம் மூலம் நூறாண்டுகளுக்கு மின்சக்தி கிடைக்கும் பேட்டரியைத் தயாரித்துள்ளன. எலக்ட்ரோ கெமிக்கல் பேட்டரிகளைவிட இது பத்து மடங்கு சிறந்தது என்கிறது வல்லுநர்கள் வட்டாரம்


Next Story