Benefits Of Drinking Water From Copper Bottle Vessels


Benefits Of Drinking Water From Copper Bottle Vessels
x

நம் முன்னோர்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கு செப்பு பாத்திரங்களையே பயன்படுத்தினார்கள். சமையலுக்கும், உணவு பரிமாறுவதற்கும் செப்பு பாத்திரங்களின் பங்களிப்பு அதிகம் இருந்தது.

செப்பு பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பயன் படுத்தியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதற்கு தண்ணீரை வடிகட்டும் தன்மை உண்டு. தண்ணீரில் இருக்கும் நச்சுக்களை நீக்கி தாதுக்களின் மதிப்பை அதிகரிக்கவும் செய்யும். இரவில் செப்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்து காலையில் பருகுவது சிறந்தது. வயிற்று பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் செப்பு பாத்திர நீரை பருகுவது நல்லது. நவீன யுகத்துக்கு ஏற்ப பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக செப்பு பாட்டில்கள் புழக்கத்துக்கு வந் திருக்கின்றன. செப்பு பாட்டிலில் நீர் நிரப்பி பருவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்ப்போம்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் அசிடிட்டி, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய பிரச்சினைகளால் பாதிப்படையும் குடல் இயக்கத்தை சீராக்க செப்பு உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்திருக்கும் நீரை பருகி வருவதன் மூலம் ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.

நச்சுக்களை நீக்கும்

அடிக்கடி வெளி உணவுகளை சாப்பிடு பவர்களாக இருந்தால், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவது மிகவும் முக்கியமானது. செப்பு பாட்டில் நீரை பருகுவது நச்சுகளின் தீய விளைவுகளை குறைப்பது மட்டுமின்றி எடை அதிகரிப்பையும் தடுக்கும். உடலில் நச்சுத்தன்மை அதிகரிப்பதால் ஏற்படும் வயிற்று நோய்களை தடுக்கவும் உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் செப்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை குடிப்பதன் மூலம், உடலில் சேரும் நச்சுப்பொருட்களும் எளிதில் வெளியேறும். ரத்தத்தையும் சுத்தப்படுத்திவிடும். உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற செப்பு நீர் சிறந்த தேர்வாக அமையும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது

மூட்டுவலி போன்ற அழற்சி பிரச்சினைகள் இருந்தால், செப்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிப்பதன் மூலம் வீக்கத்தை தணிக்க முடியும். வலி மற்றும் அழற்சி நோய்களால் ஏற்படும் பிற அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். உடலில் நச்சுக்கள், அழுக்குகள் சேரும்போது முகப்பரு உண்டாகும்.

செப்பு நச்சுக்களை வெளியேற்றுவதால் முகப்பரு பிரச்சினை நீங்கிவிடும். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க விரும்பினால், தினமும் செப்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை பருகுங்கள்.

செப்பு பாத்திரம் தண்ணீரில் இருக்கும் அனைத்து பாக்டீரியாக்களையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது. தண்ணீரையும் சுத்தப் படுத்தக்கூடியது. குடிநீர் மாசுபாடு அதிகரித்திருக்கும் சூழலில் செப்பு பாத்திரத்தின் பயன்பாடு அவசியமானது. செப்பு பாத்திரத்தில் தண்ணீரை குறைந்தது 8 மணி நேரம் வைத்திருந்தால், அதில் உள்ள அனைத்து நுண்ணுயிர்களும் அழிக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

செப்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். புதிய செல்கள் உற்பத்திக்கும் செப்பு பாத்திர நீர் உதவும். எனவே வழக்கமான தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக செப்பு பாட்டிலை பயன்படுத்துவது நல்லது.

1 More update

Next Story