பெங்களூருவுக்கு கிடைத்த பெருமை


பெங்களூருவுக்கு கிடைத்த பெருமை
x

வெளிநாட்டினர் விரும்பி தங்குவதற்கு ஏற்ற கட்டமைப்புகள் கொண்ட வளர்ந்து வரும் சிறந்த 6 நகரங்களின் பட்டியலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு இடம் பெற்றுள்ளது.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாகவும் மாறி இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாகவும்வளர்ந் துள்ளது. மேலும் மென்பொருள் நிறுவனங்கள், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என ஏராளமான அம்சங்களும் பெங்களூருக்கு இந்த சிறப்பு கிடைக்க காரணமாக அமைந்திருக்கின்றன.

வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் சர்வதேச பள்ளிகளும் இங்கு அமைந்திருக்கின்றன. அவர்கள் விரும்பும் ஆடம்பர வாழ்க்கை சூழலும் இங்கு நிலவுகிறது. பார்கள், ஸ்பாக்கள், சர்வதேச உணவகங்கள் போன்ற அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

அதிக ஊதியத்துடன் கூடிய வேலை மற்றும் மலிவு விலையில் ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சூழல் போன்றவையும் உலகளாவிய நகரமாக பெங்களூருவை மாற்றும் சாத்தியங்களை கொண்டிருக்கின்றன.

''பெங்களூருவை வளர்ந்து வரும் மையமாக நான் பார்க்கிறேன்'' என்கிறார் ஜோசப் கிம். இவர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு தனது கேமிங் ஸ்டூடியோவை இடம் மாற்றி இருக்கிறார்.

வெளிநாட்டினருக்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் கோலாலம்பூர், லிஸ்பன், துபாய், மெக்சிகோ சிட்டி மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.


Next Story