பென்கியூ ஜி.வி 11 ஸ்மார்ட் புரொஜெக்டர்


பென்கியூ ஜி.வி 11 ஸ்மார்ட் புரொஜெக்டர்
x

பென்கியூ நிறுவனம் புதிதாக எல்.இ.டி. புரொஜெக்டரை ஜி.வி 11 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இது வயர்லெஸ் புரொஜெக்டராகும். எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள லென்ஸ் 135 டிகிரி சுழலும் தன்மை கொண்டது. இதனால் காட்சிகளை எந்த கோணத்திலும் பார்க்க முடியும். சுவர் மற்றும் மேற்கூரை யில் காட்சிகளை பார்த்து ரசிக்கும் வகை யில் இதன் லென்ஸ் செயல்பாடு அமைந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு டி.வி. 10 இயங்கு தளம் உள்ளீடாக உள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ட்ரீமிங் செயலிகளைக் குறிப்பாக பிரைம் வீடியோ, யூ டியூப் உள்ளிட்ட வற்றில் காட்சிகளைக் கண்டு ரசிக்க முடியும். ஹெச்.டி.எம்.ஐ., யு.எஸ்.பி. ஏ, புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன.

இதன் விலை சுமார் ரூ.37,990.

1 More update

Next Story