பென்கியூ ஜி.எஸ் 50 வயர்லெஸ் புரொஜெக்டர்


பென்கியூ ஜி.எஸ் 50 வயர்லெஸ் புரொஜெக்டர்
x

மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் பென்கியூ நிறுவனம் ஜி.எஸ் 50 என்ற பெயரிலான எளிதில் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட போர்ட்டபிள் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.

முழுமையான ஹெச்.டி. ரெசல்யூஷனிலிருந்து காட்சிகள் வெளிப்படும். இதிலிருந்து 100 அங்குல திரை அளவுக்கு காட்சிகளை பார்க்க முடியும். ஆட்டோ போகஸ் வசதியால் திரையின் அளவுக்கு ஏற்ப காட்சிகள் கச்சிதமாக மாறும். இது வயர்லெஸ் அடிப்படையில் செயல்படும்.

இதில் புளூடூத் ஸ்பீக்கர் வசதி உள்ளது. உள்ளீடாக ஆண்ட்ராய்டு டி.வி. உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் செயல்படும். ஹெச்.டி.எம்.ஐ. 2.0 போர்ட், ஹெச்.டி.சி.பி. போர்ட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வசதி கொண்டது. மொபைல் மிரரிங் வசதி மூலம் இணைக்கலாம். இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.79,990.


Next Story