பி.எம்.டபிள்யூ. எம் 340.ஐ அறிமுகம்

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம்.340ஐ மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இது சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டதாகும்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம் என்ஜினைக் கொண்ட மாடல் களை கடந்த ஆண்டிலிருந்து அறிமுகம் செய்கிறது. இது வித்தியாசமான ஓட்டும் அனுபவத்தை அளிக்கக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.69.20 லட்சம்.
வெள்ளை, கிரே, கருப்பு, சபையர் நீலம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். பி.எம்.டபிள்யூ. கார்களின் பிரத்யேக வடிவமைப்பான கிட்னி வடிவிலான கிரில், அதில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்ட எல்.இ.டி. முகப்பு விளக்கு, பெரிய சக்கரங்கள் ஆகியன இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இனிய இசையை வழங்க ஹார்மன் கார்டோன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது 2,988 சி.சி. திறன் கொண்ட 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.
இது 374 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்து 4.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். 8 ஸ்டெப்ட் ரோனிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி உடையது. 12.3 அங்குல டிஜிட்டல் டிஸ்பிளே உள்ளது. நேவிகேஷனுக்கு 14.9 அங்குல டிஸ்பிளே திரை உள்ளது.
ஆட்டோ ஸ்டாப்-ஸ்டார்ட் வசதி, பிரேக் பிடிக்கும்போது வெளியாகும் சக்தியில் மின்சாரத்தை சேமிக்கும் நுட்பம், எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் உடையது. பாதுகாப்பான பயணத்துக்காக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. டிரைவரை அறிவுறுத்துவது, ஏ.பி.எஸ்., பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிளிடி கண்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் வசதி கொண்டது. டயர் காற்றழுத்த மானிட்டர், குழந்தைகளுக்கான இருக்கை வசதி, ஸ்பேர் சக்கரம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.






