போட் ஸ்டார்ம் ஸ்மார்ட் கடிகாரம்


போட் ஸ்டார்ம் ஸ்மார்ட் கடிகாரம்
x

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் புதிதாக ஸ்டார்ம் புரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.78 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3,799. இதில் உள்ளீடாக ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் வசதி உள்ளது.

இதில் 230 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. புளூடூத் வி 5.0 இணைப்பு வசதி கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக அளவிடும் திறன் கொண்டது. தூசு, நீர் புகா தன்மை கொண்டது.


Next Story