ஒளிரும் மலை


ஒளிரும் மலை
x

‘பிரவுன் மவுண்டன்’ மலைப் பகுதியில் பந்து போன்ற ஒளி தெரிந்து பின்பு சில வினாடிகளில் மறைந்து போய் விடுகிறது.

அமெரிக்காவின் வடக்குக் கரோலினா பகுதியில் 'பிரவுன் மவுண்டன்' என்ற மலைப் பகுதி உள்ளது. இது விநோதமான மலைப்பகுதி. இரவு நேரங்களில் விசித்திரமாக ஒளிர்கிறது.

பல நூற்றாண்டுகளாகவே இரவு நேரத்தின்போது இந்த மலைப் பகுதியில் பந்து போன்ற ஒளி தெரிந்து பின்பு சில வினாடிகளில் மறைந்து போய் விடுகிறது!

இந்த ஒளி பெரும்பாலும் சிவப்பு, வெள்ளை நிறங்களிலேயே தெரிகிறது. ஆனால், சில நேரங்களில் நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என வானவில் போல பல வண்ணங்களில் தெரிவதுமுண்டு. இதை வெகுதூரத்தில் இருந்து பார்க்க முடியும். சில நாட்களில் முழு நிலவு போன்ற வடிவில் இந்த மலை தெரியவும் செய்கிறது.

மலைக் காட்டுக்குள் ஏற்படும் தீ விபத்தினால் இந்த ஒளி ஏற்படுகின்றது என்றே ஆரம்பத்தில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இது உண்மை இல்லை என்பது பின்னர்தான் தெரிய வந்தது.

அந்த மலை ஒளிர்வது பற்றி யாருக்கும் சரியான காரணம் தெரியவில்லை. விஞ்ஞானிகளும் இந்த 'பிரவுன் மலை' பற்றி எத்தனையோ முறை ஆய்வு செய்துவிட்டனர். ஆனாலும், உண்மை புலப்படவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.


Next Story