எல்லை பாதுகாப்பு படையில் பணி

எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்) கோப்லர், தையல்காரர், சமையல்காரர், வாஷர் மேன், பார்பர், ஸ்வீப்பர், வெயிட்டர் உள்பட கான்ஸ்டபிள் பிரிவில் பல்வேறு பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆண், பெண் இருபாலரும் என மொத்தம் 1,284 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். சமையலர், வாட்டர் கேரியர், வெயிட்டர் பணிகளை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் உணவு உற்பத்தி அல்லது சமையல் சார்ந்த திறன் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
27-3-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-3-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://rectt.bsf.gov.in/ என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.
Related Tags :
Next Story






