கேனன் இ.ஓ.எஸ். ஆர் கேமரா


கேனன் இ.ஓ.எஸ். ஆர் கேமரா
x

கேமராக்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்றுத் திகழும் கேனன் நிறுவனம் புதிதாக இ.ஓ.எஸ். ஆர் 50 என்ற பெயரிலான மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் 4-கே ரெசல்யூஷனில் படக்காட்சிகளை வீடியோ படம் எடுக்கலாம். இதன் எடை குறைவானது. இதில் 24.2 மெகா பிக்ஸெல் லென்ஸ் உள்ளது. இதில் உள்ள உணர் கருவி, புகைப்படம் எடுக்கும் பொருள், மனிதர் ஆகியோரைச் சுற்றியுள்ள காட்சிகளையும் ஆராய்ந்து தேவையானவற்றை மட்டும் பதிவு செய்யும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க சிறந்தது. ரிமோட் மூலமும் இதை செயல்படுத்தலாம். ஸ்மார்ட்போன் மூலமும் இதை செயல்படுத்த முடியும். டெலி போட்டோ ஜூம் வசதி உள்ளது.

1 More update

Next Story