கலர்பிட் ஐகான் 2


கலர்பிட் ஐகான் 2
x

நாய்ஸ் நிறுவனம் புதிதாக கலர்பிட் ஐகான் 2 என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.8 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் 60 வகையான விளையாட்டு குறித்த பதிவுகள் உள்ளன. இதனால் எந்த விளையாட்டில் நீங்கள் ஈடுபட்டாலும் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும். இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு, மூச்சு பயிற்சி உள்ளிட்ட விவரங்களைக் காட்டும். இதில் 260 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 நாட்கள் வரை செயல்படும். இது குரல்வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படும். அதேபோல ஸ்மார்ட்போன் கேமரா மற்றும் அதில் உள்ள ஆடியோவை கட்டுப்படுத்தும் வசதி, நீர் மற்றும் தூசி புகாத தன்மை கொண்டது. புளூடூத் 5.1 இணைப்பு வசதி, ஸ்டாப் கடிகாரம், அலாரம் வசதி, வானிலை, போன் இருக்குமிடத்தைக் கண்டறிவது உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

இளம் சிவப்பு, சில்வர் கிரே, கருப்பு உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,499.

1 More update

Next Story