டெல் ஜி 15 லேப்டாப்


டெல் ஜி 15 லேப்டாப்
x

டெல் இந்தியா நிறுவனம் புதிதாக ஜி 15 மற்றும் ஜி 15 எஸ்.இ. என இரண்டு மாடல்களில் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை இரண்டிலுமே இன்டெல் நிறுவனத்தின் 12-வது தலைமுறை ஆல்டெர் லேக் பிராசஸர் உள்ளது. வீடியோகேம் விளையாட்டுப் பிரியர்களின் வசதிக் காக இதில் ஆர்.டி.எக்ஸ். ஜி.பி.யு. உள்ளது. இது வீடியோகேம் விளையாடும் வசதியை மேம்படுத உதவுகிறது.

இவை 15.6 அங்குல திரை யைக் கொண்டுள்ளன. இரண்டு மாடலிலுமே 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவ கம் உள்ளது. கீ போர்டுகளில் எல்.இ.டி. விளக்கு வசதி உள்ளது. இது லேப்டாப்பிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. இனிய இசையை வழங்க டால்பி ஆடியோ உள்ளது. புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.85,990. பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.1,18,990.


Next Story