மாவிக் 3 கிளாசிக் ட்ரோன் கேமரா

டி.ஜே.ஐ. நிறுவனம் புதிதாக மாவிக் 3 கிளாசிக் என்ற பெயரில் டிரோன் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இது 20 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவாகும். இது தொடர்ந்து 45 நிமிடம் பறக்கும் திறன் கொண்ட டிரோனை உடையது. 4-கே ரெசல்யூஷனில் காட்சிகளை பதிவு செய்யும். இதன் டிரோனை எளிதில் இயக்க முடியும். அந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள குரூயிஸ் கண்ட்ரோல் வசதி மூலம் ஒரே இடத்தில் ஸ்திரமாக பறந்தபடி காட்சிகளை பதிவு செய்ய முடியும். பறந்தாலும் காட்சிகள் துல்லியமாக பதிவாகும். இதில் 8 சென்சார்கள் உள்ளன. இதனால் பறக்கும் போது இடையூறு தென் பட்டால் அதிலிருந்து விலகி பறக்கும். பறக்க விட்ட இடத்திற்கே திரும்பும் வசதி இதில் உள்ளது.
இதனால் 200 மீட்டர் தொலைவு வரை பறந்து காட்சிகளை பதிவு செய்துவிட்டு திரும்பும். இதன்மொத்த எடை 895 கிராம். 30 கி.மீ. தூரம் வரை இது பறக்கும். இதன் நினைவகத் திறன் 8 ஜி.பி. ஆகும். இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விலை சுமார் ரூ.1.22 லட்சம்.






