இமோஜி


இமோஜி
x

உணர்வுகள் மட்டுமின்றி தட்ப வெப்பநிலை பற்றிக்கூறவும் இமோஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்டிடி டொகோமோ நிறுவன டிசைனர் ஷிகெட்டாகா குரிடா, இமோஜியின் தந்தை. இவர்தான், இமோஜிகளுக்கு உயிர்கொடுத்தவர். இமெயிலை விட சிறியதாக பிறருக்கு தகவல் கூற பயன்படும் இமோஜியை குரிடா தனது டொகோமோ நிறுவனத்திற்காக உருவாக்கினார். ஆனால் இன்று பல சமூக வலைத்தளங்களில், இவரது இமோஜிக்கள்தான் ஆட்சி செய்கின்றன. பெப்சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இமோஜியை வியாபாரத்திற்கென பயன் படுத்தத் தொடங்கி விட்டன. உணர்வுகள் மட்டுமின்றி தட்ப வெப்பநிலை பற்றிக்கூறவும் இமோஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2022-ம் ஆண்டு ஜூலை நிலவரப்படி, அழும் இமோஜி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் புகழ்பெற்றதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. புகழ்பெற்ற இமோஜி என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும்.

1 More update

Next Story