இன்னும் எத்தனை வருஷம் சூரியன் உயிரோட இருக்கும்...?


இன்னும் எத்தனை  வருஷம் சூரியன் உயிரோட இருக்கும்...?
x

சூரியன் இன்னும் எத்தனை காலத்திற்கு உயிரோட இருக்கும்.. இன்னும் எத்தனை காலத்திற்கு இதேபோல் வெப்பத்தை வெளியிடும் என கண்டறியப்பட்டு உள்ளது.

ஐரோப்பா நாடுகளின் விண்வெளி ஆய்வகம் மூலம் கையா என்ற விண்கலம் 2015 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இது விண்வெளியில் உள்ள பொருட்களின் தூரம், காலம், வயது, வேகம் உள்ளிட்ட பல விஷயங்களை கணிக்க உதவும்

இதனை விண்வெளியில் செயல்படும் நவீன் மேப் போன்றது இது என்று கூறலாம். நட்சத்திரங்களின் முந்தைய இருப்பிடம், இப்போதைய இருப்பிடம், கோள்கள் நகரும் விதம் என்று பல விஷயங்களை இது கண்டுபிடிக்கும். அதோடு பல நட்சத்திரங்களின் பிறப்பு, சிறப்புகளையும் கூட இது ஆய்வு செய்து வருகிறது.

இவற்றை ஒப்பீடு செய்து வரும் காலங்களில் சூரியன் எப்படி எல்லாம் மாற்றம் அடையும் என்று கணிப்புகளை வெளியிட்டு உள்ளது.

தற்போது வசதியான நடுத்தர வயதில் இருக்கும் நமது சூரியன் சுமார் 4.57 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.அதன் பின்னர் நீண்ட கால பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது.

தன்னை உயிருடன் வைத்திருக்க ஹைட்ரஜனை ஹீலியமாக இணைத்துக்கொண்டே இருப்பதால் அது நிலையானதாக உள்ளது. இதனால் சூரியனின் வெப்பம் குறையாது. இதன் காரணமாகவே சூரியனில் தற்போது புழுதி புயல், சூரிய புயல் போன்ற ஆக்டிவ் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மொத்தம் 8 பில்லியன் ஆண்டுகளுக்கு சூரியனுக்கு இப்படி அதிக வெளிச்சம் மற்றும் ஆற்றல் இருக்கும். அதன்பின் சூரியன் கூல் ஆகும்.

நடுத்தர வயதைத் தாண்டிய பிறகு, சூரியன் அதன் எரிபொருள் தீர்ந்து, இணைவு செயல்முறை நிறுத்தப்பட்ட பிறகு, சிவப்பு ராட்சத நட்சத்திரமாக மாறத்தொடங்கும் இதை சிவப்பு ராட்சத நட்சத்திரமாக (ரெட் ஜெயிண்ட்) மாறுவதை உள்ளடக்கியது. சூரியன் ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரமாக மாறும் போது, அதன் மேற்பரப்பு வெப்பநிலை கணிசமாகக் குறையும்.

அதாவது இன்னும் 8 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் சூரியன் இந்த நிலையை அடையும். ரெட் ஜெயிண்ட் ஆன பின் சூரியன் 10-11 பில்லியன் ஆண்டுகள் அதே நிலையில் இருக்கும். அதன்பின் அவை அழிந்து போகும். அதன் ஆற்றல் மொத்தாமாக குறையும் என்று கையா ஸ்பேஸ் ஆராய்ச்சி கருவி டேட்டா தெரிவித்துள்ளது. சூரியனின் அளவில் இருக்கும் மற்ற நட்சத்திரங்களை ஒப்பிட்டு இந்த டேட்டாவை கையா விண்கலம் கண்டறிந்து உள்ளது.




Next Story