பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட் கடிகாரம்


பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட் கடிகாரம்
x

பிட்ஷாட் நிறுவனம் புதிதாக கிரிஸ்டல் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.8 அங்குல அமோலெட் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது.

ஸ்பீக்கர், மைக்ரோபோன் வசதி கொண்டது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் குறுஞ்செய்திகளை அனுப்பினாலும் இதில் பார்க்க முடியும்.

சமையல் செய்வது, யோகாசன பயிற்சி, இசைக் கருவிகள் இசைப்பது, தோட்ட வேலை போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அது குறித்து துல்லியமான பதிவுகளை இது வெளிப்படுத்தும். 24 மணி நேரமும் இதய துடிப்பை துல்லியாகக் காட்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு, பிட்னெஸ் திறன் உள்ளிட்டவற்றை துல்லியமாக இது பதிவு செய்யும். ஸ்மார்ட்போன் கேமராவை இயக்குவது, ஸ்டாப் வாட்ச், அலாரம், ரிமோட் மியூசிக் பிளேயர் கண்ட்ரோல், பிளாஷ்லைட், ஸ்மார்ட்போன் இருப்பிடம் அறிவது, தண்ணீர் குடிப்பதை உணர்த்துவது போன்ற வசதிகளைக் கொண்டது.

குரல் வழிக்கட்டுப்பாட்டின் மூலமும் இது செயல்படும். இதன் மேல் பாகம் துத்தநாக அலாய் உலோகத்தால் ஆனது. தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலிக்கான் மற்றும் உலோக ஸ்டிராப்புகளைக் கொண்டது. 100 விதமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் அதுகுறித்த தகவலை வெளிப்படுத்தும். இதன் விலை சுமார் ரூ.2,999.


Next Story