ஹாட் அண்ட் கோல்ட் ஏர் கண்டிஷனர்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கோத்ரெஜ் நிறுவனம் புதிதாக ஹாட் அண்ட் கோல்ட் ஏர் கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது.
இது குளிர் காலத்தில் வெப்பமான சூழலை அளித்து உங்களுக்கு கதகதப்பை அளிக்கும். அதேபோல சுட்டெரிக்கும் கோடை காலத்தில் குளிர்ச்சியான காற்றை அளிக்கும். வெளிச் சூழல் ஜீரோ உறை நிலைக்கும் கீழாக சரியும்போது அறையில் வெப்பமான சூழல் அவசியமாகிறது.
அப்போது இது வெப்பமான காற்றை வெளியிடும். 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் தகிக்கும்போது குளிர்ச்சியான சூழலை இது உருவாக்கும்.
இது 1.5 லிட்டர் அளவில் ஸ்பிளிட் ஏ.சி.யாக வந்துள்ளது. 3 நட்சத்திரக் குறியீடு கொண்டது. இதில் ரோட்டரி இன்வெர்டர் கம்ப்ரஸர், 100 சதவீதம் தாமிர காயில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது நீடித்து உழைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.65,900.
Related Tags :
Next Story






