மணமகன் ஏலம் விடப்படும் மாப்பிள்ளை சந்தை...! 700 வருடங்களாக நடைபெறும் வினோதமான நடைமுறை...!


மணமகன் ஏலம் விடப்படும் மாப்பிள்ளை சந்தை...!  700 வருடங்களாக நடைபெறும் வினோதமான  நடைமுறை...!
x

கி.பி.1310ல் ஆண்டில் மாப்பிள்ளை சந்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன் கர்னாட் வம்சத்தின் மன்னர் ஹரிசிங் தேவ்வால் தொடங்கப்பட்டது.

புதுடெல்லி

வரதட்சணை, இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பானது என்றாலும், குறிப்பாக பீகார் மற்றும் அதை ஒட்டிய வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், அதிக சமூக மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது.இந்தியாவில் ஒரு வருடத்தில் வரதட்சணை கொடுக்கப்படுபவைகளின் மொத்த மதிப்பு 5 பில்லியன் டாலர்கள்( ரூ.39,78,52,500 கோடி) என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர் இது பொது சுகாதாரத்திற்கான இந்தியாவின் வருடாந்திர செலவுக்கு சமம்.

பீகாரில் வரதட்சணை ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது மற்றும் பல்வேறு அரசாங்கங்கள் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரங்களைத் தொடங்கினாலும் வரதட்சணை மரணங்கள் மற்றும் கொலைகள் அங்கு அதிகம் நடைபெறுகிறது. 2020 ஆம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, பீகார் 1,000 க்கும் மேற்பட்ட வரதட்சணை இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது, இது நாட்டிலேயே இரண்டாவது அதிகபட்சமாகும்.

வரதட்சணையைத் தவிர்ப்பதற்காக துப்பாக்கி முனையில் திருமணம் செய்ய மணமகளின் குடும்பத்தினரால் ஆண்கள் கடத்தப்பட்டும் வருகின்றனர். இது போன்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மாப்பிள்ளை சந்தை பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் மிதிலாஞ்சலில் நடைபெறுகிறது. இந்த் சந்தி 700 ஆண்டுகள் பாரம்பரியமாக நட்டைபெற்று வருகிறது.இந்த சந்தை 9 நாட்கள் நடைபெறுகிறது. அனைத்து சாதி மற்றும் மதத்தை சேர்ந்த மணமகன்கள் இங்கு குவிவார்கள் மணமகள் தங்கள் மணமகனை தேர்வு செய்து கொள்ளலாம்.

உள்ளூரில் "சவுரத் சபா" என்று அழைக்கப்படும், மாவட்டம் முழுவதிலும் உள்ள மைதில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு விருப்பமான வரன்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தங்கள் மகள்களுடன் சந்தைக்கு வருகிறார்கள்.

பாரம்பரியமான கருஞ்சிவப்பு நிற வேட்டி மற்றும் குர்தா அல்லது ஜீன்ஸ் மற்றும் சட்டைகளை அணிந்து ஆயிரக்கணக்கான மாப்பிள்ளைகள் சந்தையில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் பின்னணி மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும்.

மணமகனைத் தீர்மானிக்கும் முன், குடும்பங்கள் மணமகனின் தகுதிகள் மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணியைச் சரிபார்த்துக்கொள்வார்கள். அவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள் போன்ற சான்றுகளைக் கேட்கிறார்கள். மணமகள் மணமகனைத் தேர்ந்தெடுத்தவுடன், அடுத்த நடவடிக்கைகளுக்காக குடும்பங்களுக்கு இடையே பேசுவார்த்தை தொடங்கப்படுகிறது. மணமகன் தேர்வு செய்யப்பட்டவுடன் திருமண சடங்குகளை பெண்ணின் குடும்பத்தினர் செய்து முடிக்கின்றனர்.

இது கி.பி.1310ல் ஆண்டில் இந்த மாப்பிள்ளை சந்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன்பு கர்னாட் வம்சத்தின் மன்னர் ஹரிசிங் தேவ் என்பவரால் இந்த மணமகன் தொடங்கப்பட்டது. ஒரே கோத்திரத்தில் திருமணம் நடக்கக் கூடாது, மணமக்களின் கோத்திரம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதே இதற்குப் பின்னால் உள்ள நோக்கமாகும்.

இச்சபையில், ஏழு தலைமுறைக்கு ரத்த உறவும், ரத்தப் பிரிவும் இருந்தால், திருமணம் நடக்காது. வரதட்சணை இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல், பெண்கள் தங்களுக்கு விருப்பமான மாப்பிள்லைகளை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ள இந்த சந்தை தொடங்கப்பட்டது. ஆனால், இன்று இந்த திருமணங்களில் வரதட்சணை கொடுத்து வாங்கும் பழக்கம் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பமுள்ள ஆண்கள் பொதுக் காட்சியில் வைக்கப்படுகிறார்கள். மேலும் பெண்களின் ஆண் பாதுகாவலர்கள், பொதுவாக தந்தை அல்லது சகோதரர் மணமகனைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

திருமணப்பெண்ணின் குடும்பம் தங்களுக்குத் தேவையான வரதட்சணையைக் கொடுக்க முடிந்தால், அவர்கள் விரும்பும் மாப்பிள்ளையை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்

இந்த நடைமுறை மிதிலாஞ்சலில் மிகவும் பிரபலமானது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கு வருகை தருகின்றனர்.


Next Story