மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. ஜி.டி. பிளாக் சீரிஸ்


மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. ஜி.டி. பிளாக் சீரிஸ்
x

பிரீமியம் கார்களில் எப்போதுமே முன்னிலை வகிப்பது மெர்சிடஸ் பென்ஸ் தயாரிப்புகள்தான். இந்நிறுவனம் தனது ஏ.எம்.ஜி. ஜி.டி. மாடலில் பிளாக் சீரிஸை அறிமுகம் செய்துள்ளது.

பெரும் கோடீஸ்வரர்களை கருத்தில் கொண்டு இந்த காரை இறக்குமதி செய்து விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சூப்பர் காராக வந்துள்ள ஏ.எம்.ஜி. ஜி.டி.யை ஸ்டார்ட் செய்து 3.2 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இது 730 ஹெச்.பி. திறனையும், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டுள்ளது.

இதில் வி 8 என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. 7 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 200 கி.மீ வேகத்தை 9 விநாடிகளில் தொட்டு விட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கி.மீ. ஆகும். மிகப்பெரிய கிரில், கார்பன் பைபரால் ஆன டிபியூசர், காற்றை கிழித்துச் செல்லும் வகையில் ஏரோ டைனமிக் வடிவமைப்பு இதன் சிறப்பம்சங்களாகும். இதன் முன்புற பானெட் கார்பன் பைபரால் ஆனது. இதன் முகப்பில் காற்று உள்ளே செல்லும் வகையிலான வடிவமைப்பு உள்ளது. இது தரையில் அதிகபட்ச பிடிமானத்தை அளிப்பதோடு என்ஜினை குளிர்விக்கவும் வழி செய்கிறது. மேலும் ஒருங்கிணைந்த கார்பன் மேற்கூரை காரின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதாக உள்ளது.

இதில் 10 ஸ்போக் கொண்ட 19 அங்குல அலாய் சக்கரம் முன்புறமும், 20 அங்குல அலாய் சக்கரம் பின்புறமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான சஸ்பென்ஷன் சொகுசான பயணத்துக்கு வழிவகுக்கிறது. காரின் இருக்கைகள் ஆரஞ்சு நிற தையல் கொண்டவையாக அழகுற வடிவமைக்கப் பட்டுள்ளன. இருக்கைகள் எடை குறை வாக இருப்பதற்காக கார்பன் பைபர் பயன் படுத்தப்பட்டுள்ளது. கார் ஓட்டுவதை எளிமையாகவும், சுகமானதாகவும் ஆக்கும் வகையில் இதன் செயல்பாடு உள்ளது. டிரைவர் மற்றும் முன்புற பயணி, டிரைவரின் முழங்கால் பகுதி, முன் இருக்கை பயணியின் பக்கவாட்டுப் பகுதி, 2 கர்டென் பகுதி உள்பட மொத்தம் 7 ஏர் பேக்குகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றன.


Next Story