ஒரு நிமிடத்திற்குள் பல வித்தைகளை செய்து கின்னஸ் சாதனை படைத்த எலி..!


ஒரு நிமிடத்திற்குள் பல வித்தைகளை செய்து கின்னஸ் சாதனை படைத்த எலி..!
x
தினத்தந்தி 16 July 2022 2:30 PM GMT (Updated: 16 July 2022 2:30 PM GMT)

ஒரே நிமிடத்தில் ஒரு கினிப் பன்றியால் செய்து காட்டப்பட்ட அதிக வித்தைகள் என்ற கின்னஸ் சாதனையை 'கோகோ' என்ற வளர்ப்பு பிராணி படைத்துள்ளது.

வாஷிங்டன்,

ஒரு நிமிடத்திற்குள் பல வித்தைகளை செய்து காட்டி, கின்னஸ் சாதனையை 'கோகோ' என்ற வளர்ப்பு பிராணி படைத்துள்ளது.

அமெரிக்காவில் வளர்க்கப்படும் கினிப் பன்றி ஒன்று இந்த உலக சாதனையை படைத்துள்ளது. வட கரோலினாவை சேர்ந்த கோகோ என்ற கினிப் பன்றி, மார்ச் 6 அன்று, ஒரு நிமிடத்தில் அதிக தந்திரங்களை செய்து உலக சாதனையை படைத்துள்ளது.

கினி எலி அல்லது கினிப் பன்றி(கேவியா போர்செல்லஸ்) என்றழைக்கப்படும் இந்த விலங்குகள், பன்றி குடும்பத்தைச் சார்ந்தவையோ கினியா நாட்டைச் சார்ந்தவையோ அல்ல.அவை கொறிப்பன வரிசையில்(எலி) குடும்பத்தைச் சார்ந்த உயிரினமாகும்.

கோகோ என்று பெயரிடப்பட்ட 5 வயது ஆண் அபிசீனிய கினிப் பன்றியின் உரிமையாளர் கிவென், டிசம்பர் 2018இல் அதை விலை கொடுத்து வாங்கி, செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.

கிவென் அந்த பிராணிக்கு பல வித்தைகளை கற்பிக்கத் தொடங்கினார். அதன் பயனாக, அந்த கினிப் பன்றி 70க்கும் மேற்பட்ட தந்திரங்களில் விரைவாக தேர்ச்சி பெற்று ஒரு சாம்பியனாக மாறியது.

'கின்னஸ் உலக சாதனையின்' அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும், அந்த கினிப் பன்றி 'கோகோ' வித்தைகளை நிகழ்த்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை பலர் பார்த்து பாராட்டியுள்ளனர்.



Next Story