ஹோண்டா ஆக்டிவா ஹெச் ஸ்மார்ட்

ஹோண்டா ஆக்டிவா ஹெச் ஸ்மார்ட் என்ற மாடல் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது ஆக்டிவா. இதில் தற்போது ஹெச் ஸ்மார்ட் என்ற மாடல் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.80,537. இதில் சாவி இல்லாத நுட்பத்துடன் பல்வேறு சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
இது 6 கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். இப்புதிய மாடலில் மின்னணு சாவி நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நுட்பம் வழக்கமாக கார்களில் மட்டுமே பயன்படுத்தப் படும். இது வழக்கமான சாவி போட்டால் திறக்காது. கார்களுக்கென வடிவமைக்கப் பட்டதைப் போல பொத்தான்களைக் கொண்டதாக இது உள்ளது. இது 6-வது (6-ஜி) தலைமுறை மாடலாகும்.
இப்போது முதல் முறையாக இருசக்கர வாகனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தியுள்ள இடத்தை பொத்தானை அழுத்துவதன் மூலம் எளிதில் கண்டறியலாம். பொத்தானை அழுத்தியதும் நான்கு இண்டிகேட்டர் விளக்குகளும் எரிந்து அதன் இருப்பிடத்தை உணர்த்தும். இதேபோல ஸ்மார்ட் சாவி மூலம் ஹேண்டில் பாரை லாக் செய்வது, பெட்ரோல் நிரப்பும் மூடியை திறப்பது, சீட்டின் மேல் பாகத்தைத் திறப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்ய முடியும்.
இதில் அலாய் சக்கரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 110 சி.சி. திறன் கொண்ட இந்த மாடல் முந்தைய மாடலை விட ஸ்மார்ட் சாவி எனும் மேம்பட்ட நுட்பத்தைக் கொண்டதாக வந்துள்ளது.






