ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. எஸ்.யு.வி


ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. எஸ்.யு.வி
x

ஹோண்டா நிறுவனம் இரண்டாம் தலைமுறை எஸ்.யு.வி. மாடலை டபிள்யூ.ஆர்.வி என்ற பெயரில் அறிமுகம் செய்கிறது.

முந்தைய மாடலைக் காட்டிலும் நீளம், அகலம், உயரம் ஆகியன இதில் அதிகரிக்கப்பட்டுள்ளன. சொகுசான கூபே காரைப் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட எஸ்.யு.வி. இதுவாகும். இது 4,060 மி.மீ. நீளம், 1,608 மி.மீ. உயரம், 1,780 மி.மீ அகலம் கொண்டதாகும். இது 220 மி.மீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 380 லிட்டர் இடவசதி கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்துக்கு இதில் 6 ஏர் பேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. லேன் கீப்பிங் அசிஸ்ட், அவசரகால பிரேக்கிங் வசதி மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி கொண்டது. இது 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக வந்துள்ளது.

1 More update

Next Story