ஹூயாவெய் பாக்கெட் எஸ் மடக்கும் ஸ்மார்ட்போன்


ஹூயாவெய் பாக்கெட் எஸ் மடக்கும் ஸ்மார்ட்போன்
x

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹூயாவெய் நிறுவனம் புதி தாக 6.9 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்ட மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் வெளிப்பகுதியில் 1.04 அங்குல அமோலெட் திரை உள்ளது. கருப்பு, சில்வர், பச்சை, இளம் சிவப்பு, தங்க நிறம் மற்றும் நீல நிறங்களில் இது வந்துள்ளது. இதன் பிரதான கேமரா 40 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இத்துடன் 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் செல்பி எடுப்பதற்கு வசதியாக உள்ளது.

இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இரண்டு சிம் போடும் வசதி கொண்டது. பக்கவாட்டில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 40 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.68,010.

இதில் 512 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.85,060.

1 More update

Next Story