இன்பேஸ் அர்பன் பிட் ஸ்மார்ட் கடிகாரம்


இன்பேஸ் அர்பன் பிட் ஸ்மார்ட் கடிகாரம்
x

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் இன்பேஸ் நிறுவனம் அர்பன் பிட் எஸ் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.78 அங்குல அமோலெட் திரை, ஒருங்கிணைந்த ஸ்பீக்கர் மற்றும் குரல் வழி கட்டுப்பாட்டு வசதி கொண்டது. இதனால் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகளுக்குப் பதில் அளிக்க முடியும்.

இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்யும். 120-க்கும் மேற்பட்ட விளையாட்டு களில் எதில் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாகக் காட்டும். இதன் மேல் பாகம் துத்தநாக அலாயால் ஆனது. இது தோலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத் தாத தன்மை கொண்டது. அத்துடன் சிலிக்கான் ஸ்டிராப்பும் பாதுகாப்பானதாகும்.

ஸ்மார்ட்போன் இருக்குமிடத்தை அறியும் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. ஸ்மார்ட்போனில் கேமரா மற்றும் பாடல்கள் கேட்பதை கட்டுப்படுத்தும் வசதி, கால்குலேட்டர், பிளாஷ்லைட் மற்றும் வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இதில் உயர் தரத்திலான லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. கருப்பு, சில்வர், பச்சை, கிரே உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.4,999.


Next Story