இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே


இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே
x
தினத்தந்தி 2 Jun 2022 12:34 PM GMT (Updated: 2 Jun 2022 12:46 PM GMT)

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹாட் 12 பிளே என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.82 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் 12 என்.எம். பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

இதில் ஹைபிரிட் அளவிலான 2 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

கருப்பு, நீலம், தங்க நிறம், பச்சை உள்ளிட்ட வண்ணங் களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.8,499.


Next Story