இன்பினிக்ஸ் நோட் 12 ஐ


இன்பினிக்ஸ் நோட் 12 ஐ
x

இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 12 ஐ என்ற பெயரில் புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 எஸ்.ஓ.சி. பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 2 சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

வெள்ளை, கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.9,999.


Next Story