இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா


இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா
x

இன்பினிக்ஸ் நிறுவனம் ஜீரோ அல்ட்ரா என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.8 அங்குல 3 டி வளைவுகளுடன் கூடிய முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதன் பின்புறம் 200 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார், 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.29,999.


Next Story