ஐ.கியூ.ஓ.ஓ. 11 ஸ்மார்ட்போன்


ஐ.கியூ.ஓ.ஓ. 11 ஸ்மார்ட்போன்
x

ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் புதிதாக ஐ.கியூ.ஓ.ஓ. 11 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.78 அங்குல குவாட் ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 8-வது தலைமுறை பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உடையது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.59,999


Next Story