ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தா?


ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தா?
x

பொருட்களை வாங்கவில்லையென்றாலும் கூட ஷாப்பிங் தளத்துக்குச் செல்வதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்கின்றனர்.இந்த மனநிலையை ஒருவிதமான குறைபாடு என்று எச்சரிக்கிறது ஹனோவர் மெடிக்கல் ஸ்கூல்.

பருப்பு முதல் லேப்டாப் வரை அனைத்தையும் ஆன்லைன் ஷாப்பிங்கிலேயே வாங்கிக்கொள்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மாதத்துக்கு இரண்டு முறையாவது பெரும் தள்ளுபடியில் பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கின்றன. தள்ளுபடி போதையில் மயங்கி சிலர் தேவையே இல்லையென்றாலும் எதையாவது ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

இப்படி மாதம் ஒரு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்கள், வாரம் ஒருமுறைக்கு மாறி, கடைசியில் தினமும் எதையாவது ஆர்டர் செய்கிறார்கள். தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள். பொருட்களை வாங்கவில்லையென்றாலும் கூட ஷாப்பிங் தளத்துக்குச் செல்வதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்கின்றனர்.

தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது இப்படி அந்த இணையதளங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இந்த மனநிலையை (buying-shopping disorder) ஒருவிதமான குறைபாடு என்று எச்சரிக்கிறது ஹனோவர் மெடிக்கல் ஸ்கூல். இதனால் குடும்பத்தின் அமைதி குலைந்து பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை யும் செய்கிறது.


Next Story