இஸ்ரோவில் வேலை


இஸ்ரோவில் வேலை
x

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 526 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் உதவியாளர், இளநிலை தனி உதவியாளர்கள், எழுத்தர், ஸ்டெனோகிராபர் போன்ற காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 526 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டெனோகிராபர் பதவிக்கு நிமிடத்திற்கு 60 வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும். 9-1-2023 அன்றைய தேதிப்படி 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

எழுத்து தேர்வு, திறன் தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஸ்டெனோகிராபி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டேராடூன், கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-1-2023. விண்ணப்பிப்பது பற்றிய விரிவான விவரங்களை https://www.isro.gov.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

1 More update

Next Story