எம்.பி.பி. மோட்டார் சைக்கிள்


எம்.பி.பி. மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 12 Jan 2023 9:49 AM GMT (Updated: 12 Jan 2023 9:53 AM GMT)

மோட்டோ போலோங்கா பாசினோ என்பதன் சுருக்கமே எம்.பி.பி. ஆகும். எம் 502 என் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

இத்தாலியத் தயாரிப்பான எம்.பி.பி. நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களை டெல்லியில் நடைபெறும் எக்ஸ்போ 2023-ல் காட்சிப்படுத்த உள்ளது. மோட்டோ போலோங்கா பாசினோ என்பதன் சுருக்கமே எம்.பி.பி. ஆகும். எம் 502 என் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

இது லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் 486 சி.சி. திறன் உடைய இரட்டை என்ஜினைக் கொண்டது. 51 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 45 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப் படுத்தும்.

இதற்கேற்ப இது 6 கியர்களைக் கொண்டுள்ளது. டிஸ்க் பிரேக் வசதி, அலாய் சக்கரம், பைரேலி ஏஞ்சல் டயர்கள் இதன் சிறப்பம்ச மாகும்.


Next Story