என்ஜினீயர்களுக்கு பணி


என்ஜினீயர்களுக்கு பணி
x

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பி.டெக் (எலெக்ட்ரிக்கல், இ.சி.இ, சி.எஸ்./ஐ.டி), டிப்ளமோ (எலெக்ட்ரிக்கல், இ.சி.இ) போன்ற படிப்புடன் ஓராண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

29 வயதுக்குட்பட்டிருக்கவும் வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

21-11-2022 முதல் 11-12-2022 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு https://www.powergrid.in/ என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.

1 More update

Next Story