கவாஸகி சூப்பர் சார்ஜ்டு எம்.ஒய் 23. இஸட். ஹெச் 2


கவாஸகி சூப்பர் சார்ஜ்டு எம்.ஒய் 23. இஸட். ஹெச் 2
x
தினத்தந்தி 23 March 2023 5:22 PM IST (Updated: 28 March 2023 11:29 AM IST)
t-max-icont-min-icon

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் கவாஸகி நிறுவனம் தனது எம்.ஒய் 23. மாடலில் சூப்பர் சார்ஜ்டு எனப்படும் மேம்பட்ட திறன் கொண்ட இஸட். ஹெச் 2. மற்றும் இசட். எச் 2. எஸ்.இ. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இஸட். ஹெச் 2., எஸ்.இ. மாடல்கள் அனைத்தும் மெடாலிக் கிரே வண்ணத்துடன் பச்சை வண்ணம் சேர்ந்த கலவையாக வந்துள்ளன. 998 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. நான்கு சிலிண்டர் உள்ளது. முன்புறம் பிரெம்போ டிஸ்க் பிரேக் உள்ளது. ஒருங்கிணைந்த ஓட்டும் நிலை தேர்வு வசதி கொண்டது. ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, டி.எப்.டி. திரை உள்ளது.

எம்.ஒய் 23. இஸட்.ஹெச் 2 மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.23,02,000.

இஸட். ஹெச் 2. எஸ்.இ. மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.27,22,000.

1 More update

Next Story