கே.டி.எம். ஆர்.சி 200. ஜி.பி. எடிஷன்

கே.டி.எம். மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஆர்.சி 200. மற்றும் ஆர்.சி 390. மாடலில் ஜி.பி. எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
மிகச் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாக இவ்விரு மாடல்களும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டு அறிமுகமாகியுள்ளன.
கே.டி.எம். ஆர்.சி 390. ஜி.பி. எடிஷன் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.3,16,070. ஆர்.சி 200. ஜி.பி. எடிஷன் விலை சுமார் ரூ.2,14,688. ஆர்.சி 200. ஜி.பி. எடிஷன் மாடல் ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. இது 10 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 25 பி.எஸ். திறனை வெளிப்படுத்தும். இதன் பெட்ரோல் டேங்க் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. இதன் என்ஜின் 199.5 சி.சி. திறனை வெளிப்படுத்தும். 19.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சி யில் வெளிப்படுத்தும். அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான விண்ட் ஷீல்டு, டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டிரிப் மீட்டர், டெகோ மீட்டர், ஓடோ மீட்டர், பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.
செல்ப் ஸ்டார்ட் வசதி மட்டும் கொண்டது. கிக்கர் கிடையாது. பன்முக டிஸ்க் கிளட்ச் மற்றும் 6 கியர்களைக் கொண்டது. அலாய் சக்கரம், டிரெலிஸ் பிரேம், டியூப்லெஸ் டயர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. ஆர்.சி 390. ஜி.பி. எடிஷன் 373.27 சி.சி. திறன் கொண்டது. இது ஒற்றை சிலிண்டர் கொண்டது.
இது 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும். 43.5 பி.எஸ். திறனை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதியுடன் வந்துள்ளது. இதன் எடை 172 கிலோவாகும். இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 14.5 லிட்டர் ஆகும்.






