கே.டி.எம். ஆர்.சி. மோட்டார் சைக்கிள்


கே.டி.எம். ஆர்.சி. மோட்டார் சைக்கிள்
x

கே.டி.எம். நிறுவனம் புதிதாக ஆர்.சி.8 சி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடலில் மொத்தமே 200 மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரிக்க கே.டி.எம். நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு இதேபோன்று ஆர்.சி.8 சி மாடல் மோட்டார் சைக்கிள் மாடலில் மொத்தமே 100 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்தது. தற்போது 200 மோட்டார் சைக்கிளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது 889 சி.சி. திறன் கொண்டது. 135 ஹெச்.பி. திறனை 11 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 8,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதன் என்ஜினில் டைட்டானியம் வால்வு இடம்பெற்றுள்ளது. இது பேரலல் இரட்டை என்ஜினைக் கொண்டது. முந்தைய மாடலை விட 7 ஹெச்.பி. கூடுதல் திறன் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.33.22 லட்சம்.

1 More update

Next Story