லாவா பிளேஸ் என்.எக்ஸ்.டி


லாவா பிளேஸ் என்.எக்ஸ்.டி
x

லாவா நிறுவனம் தற்போது பிளேஸ் என்.எக்ஸ்.டி. என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பிளேஸ் சீரிஸில் வந்துள்ள புதிய மாடலில் 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரை உள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 37 12 என்.எம். பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும்.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 13 மெகாபிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

பச்சை, சிவப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.9,299.


Next Story