லெனோவா ஐடியாபேட் லேப்டாப்


லெனோவா ஐடியாபேட் லேப்டாப்
x

லெனோவா நிறுவனம் புதிதாக ஐடியாபேட் என்ற பெயரில் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

புரோ 5, புரோ 5 ஐ, ஸ்லிம், ஐடியாபேட் பிளெக்ஸ் 3 ஐ, டேப் எம் 9 என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. இவை 14 அங்குலம் முதல் 16 அங்குல திரையைக் கொண்டவையாக வந்துள்ளன. கிரே, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களிலும் கிடைக்கும்.

இதில் விண்டோஸ் 11 இயங்குதளம் உள்ளது. இன்டெல் அல்லது ஏ.எம்.டி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிளெக்ஸ் 3 ஐ குரோம்புக் 12 அங்குல திரையைக் கொண்டுள்ளது. டேப் எம் 9 மாடல் 9 அங்குல திரையைக் கொண்டதாகவும் 7.99 மி.மீ தடிமன் கொண்டதாகவும் வந்துள்ளது. லேப்டாப்களின் விலை சுமார் ரூ.1,00,488 முதல் ஆரம்பமாகிறது. ஐடியா பேட் ஸ்லிம் மாடல் விலை சுமார் ரூ.53,676 முதல் ஆரம்பமாகிறது.

1 More update

Next Story