லெனோவா ஜியோஜின் டேப்லெட்


லெனோவா ஜியோஜின் டேப்லெட்
x

லெனோவா நிறுவனம் புதிதாக ஜியோஜின் என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இது 10.6 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் 680 எஸ்.ஓ.சி. பிராசஸர், 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம்கள் உள்ளன. அதேபோல 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. நினைவக வசதி கொண்டதாகவும் இது வந்துள்ளது. பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டை பயன்படுத்துவதன் மூலம் இதன் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

இதன் பின்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா எல்.இ.டி. பிளாஷ் வசதியுடன் வந்துள்ளது. இதில் 7 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. இதில் 4 ஸ்பீக்கர்கள் உள்ளன. புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.62,800.


Next Story