லெனோவா டேப் எம் 10 பிளஸ்


லெனோவா டேப் எம் 10 பிளஸ்
x

லெனோவா நிறுவனம் 3-வது தலைமுறை டேப்லெட்டை எம் 10 பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இது 10.61 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதன் எடை 465 கிராம் ஆகும். இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 எஸ்.ஓ.சி., 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதில் ஒரு மைக் மற்றும் 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டது.

இதில் 8 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், முன்புறமும் உள்ளன. தேவைப்பட்டால் இதற்கான பிரிசிஷென் பேனாவையும் வாங்கிக் கொள்ளலாம். புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. இதன் எடை 465 கிராம். 7,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.19,999. இதில் எல்.டி.இ. மாடல் விலை சுமார் ரூ.21,999.


Next Story